Wednesday, January 7, 2015

மோதிக்கு 50 ரூ. அனுப்பியிருக்கன்!


அண்ணே வணக்கம்ணே!
மோதிக்கென்ன செலவுக்கு காசில்லையா? இவரு எதுக்கு அம்பது ரூவா அனுப்பனும்னு ஒரு கேள்விவரும். சொல்றேன். இந்த பதிவு போடறதே ஒரு தற்கொலை முயற்சி மாதிரி தான். ஏன்னா இந்த ப்ளாகே ஹேக் பண்ணப்படலாம். ப்ளாக் பண்ணப்படலாம் .அல்லது ரஜினி ரசிகருங்க மாதிரி மோதி ரசிகர்கள் ரிப்போர்ட் அப்யூஸ் ஆப்ஷன்ல போயி சில்மிசம் பண்ணலாம்.ஆனாலும் துணிஞ்சி தான்  நல்லா ரோசிச்சு போனியாகாத இந்த ப்ளாக்ல இந்த பதிவை போட்டிருக்கன்.

செரி செரி..மொக்கை போதும்.மேட்டருக்கு வந்துர்ரன்.
மோதிஜீ எலீக்சனுக்கு மிந்தி  வானத்தை கீறி வைகுண்டத்தை காட்டறேன்னுட்டிருந்தார். செயிச்சு வந்த பிறவு ? மகாசனங்களே நீங்க ஐடியா கொடுங்க நான் கீசிடறேன்னு வசனம் விட ஆரம்பிச்சாரு. இதுக்காவ எத்தீனி விளம்பரம்? தனிய ஒரு சைட்டு வேற, நார்த் ப்ளாக்ல ஆலோசனை பெட்டில்லாம்  கூட வச்சிருக்காய்ங்களாம்.

செரி.. நம்ம பக்கம் தப்புவரக்கூடாதுன்னு மெனக்கெட்டு இந்தியாவோட அசலான பிரச்சினைகளை லிஸ்ட் அவுட் பண்ணிக்கிட்டு  நம்ம ஸ்டைல்ல தீர்வுகளையும் தொகுத்து சேஞ்ச் ஆர்க் வெப்சைட்ல ஒரு மனுவா போட்டம். இன்னைய தேதிக்கு 169 பேர் சைன் பண்ணி சப்போர்ட் பண்ணியிருக்காய்ங்க.
மேற்படி மனுவோட லிங்கை பி.எம்.ஓ ,மோதி ஜீயோட சைட்டு,பா.ஜ.க சைட்டுன்னு சகட்டுமேனிக்கு கொடுத்துக்கிட்டிருந்தம்.ஆரும் கண்டுக்கற மாதிரி தெரீல.

நம்ம மகாசனங்க லட்சோப லட்சமா திரண்டு வந்து மனுவுல கை.எ போட்டு சென்சேஷன் ஆகி மோதிஜீ சாயா சாப்பிட வந்துரப்போறாருன்னு நினைக்கலாம்னா நாம என்ன ரசினி காந்தா? ப்ர்ர்ர்ர்ர்ர்.

மேற்படி மனுவோட ப்ரிண்ட் அவுட்டை ஜூலை ,16 ஆம்தேதி ஸ்பீட் போஸ்ட்ல அனுப்பினன்.பிறகு கயிவி கயிவி ஊத்தி ஃபேக்ஸ்ல ரிமைண்ட் பண்ணம். ஆரும் கண்டுக்கல. இடையில நண்பர் ஒருத்தரு அருண் ஜெட்லி புலி. அவருக்கு அனுப்புங்கன்னாரு.அன்னாருக்கும் அனுப்பினம்.

இன்னாங்கடா இது எந்த பிரச்சினைய சொன்னாலும் ஆட்சிக்கு வந்து 3 மாசம் தான் ஆச்சு,ஆறு மாசம் தான் ஆச்சுன்னு பாய்லா காட்டறானுவ. தாளி லெட்டருக்கு பதில் போடவும் இத்தனை காலம் தேவையான்னு டவுட் வந்துருச்சு.

நேத்திக்கு மோதிஜீக்கு ரூ.50 க்கான போஸ்டல் ஆர்டர் இணைச்சு ரிமைண்ட் பண்ணேன். "பாஸ் ! கக்கூஸு கட்டவே டப்பு இல்லாம ஆஸ்திரேலியாவுல மடிப்பிச்சை கேட்கிற உங்களுக்கு ரிப்ளை கவர் வைக்காம லெட்டர் போட்டது தப்பு தான்.

இப்பம் அம்பது ரூவா போஸ்டல் ஆர்டர் வச்சிருக்கன்.தபால் செலவுக்கு வச்சிக்கங்க. ஒடனே நம்ம லெட்டரை தேடிப்பிடிக்க முடியாதுங்கறதால அதன் பிரதியையும் கூடவே வச்சிருக்கன்.

இப்பமாச்சும் நம்ம ரோசனைகளை படிச்சு பாருங்க. இதுல பாதிய அமல் பண்ணாலும்  சாவற வரைக்கும் நீங்கதேன் பி.எம். கடேசி வரை பி.ஜே.பி தவிர எந்தகட்சியும் ஆட்சியை பிடிக்க முடியாதுன்னு பீலா விட்டு கவரிங் லெட்டர் வச்சேன்.

பார்ப்பம். இப்பமாச்சும் பி.எம்.ஓ -ல உள்ள பிரகஸ்பதிகள் குண்டிமண்ணை தட்டி விட்டு வேலை பார்க்கிறாய்ங்களா? அல்லது இப்பம் இது பெய்டட் சர்வீஸாயிட்டதால கன்ஸ்யூமர்ஸ் ஃபோரம் போயி கேஸு போட வைக்கிறாய்ங்களா?

லெட் அஸ் வெய்ட் அண்ட் சீ !